பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் பணியாற்றுவதாகவும், சில பாடசாலைகளில் ஆசியிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் இந்நாட்டின் ஆசிரியர் ஆட்சேர்ப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
