இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழு இன்றையதினம் (17) மீண்டும் கூடவுள்ளது.
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு கடந்த 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதன் முறையாக கூடியிருந்தது.
குறித்த கூட்டத்தில் வலுசக்தி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது மின்சார சட்டமூலத்தை திருத்துவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் சில விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்ததுடன், இணக்கம் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களுடன் சட்டமூலத்தை மும்மொழியிலும் அச்சிட்டு இன்று (17) குழுவின் அனுமதிக்காக சமர்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
