குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்த பின்னர், அங்கிருந்து நேற்று (16) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, அவரது பயணப் பைக்குள் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் 25 உணவுப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 356 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply