ஹபராதுவ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் உனவட்டுன பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மில்லிமீற்றர் ரவைகள் 04 மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
