ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாராஹென்பிட்ட பகுதியில் வைத்து இன்றையதினம் (17) குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த 40 மற்றும் 50 வயதான பறவைகள் சரணாலயத்தின் முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 250 மில்லியன் பெறுமதியுடைய அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
