சோழன் உலக சாதனை புத்தகத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி இடம்பிடித்துள்ளார்.
நுவரெலியா – கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவியே குறித்த சாதனையை படைத்துள்ளார்.
குறித்த மாணவி தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறி சாதனை படைத்துள்ளார்.
மாணவியின் இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.
மாணவியின் முயற்சியை மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவி கனிஷ்காவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் பைல் போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலப்பனை வலயக் கல்வி அலுவலக இயக்குநர் திசாநாயக, பாடசாலையின் தலைமை ஆசிரியர் விஜேந்திரன் போன்றோரினால் வழங்கி பாராட்டப்பட்டது.
சோழன் உலக சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
