அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.
கலஹிடியாகொட கிராமத்தைச் சேர்ந்த கெலும் நமல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மின்சார கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த உஹன பொலிஸ் அதிகாரிகள் பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் இணைத்த ஒருவரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
