சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி தீயில் எரிந்த விவகாரம்- விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கணவர்!

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய தமிழினி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி கடந்த மாசி மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றி மாசி மாதம் 16ஆம் திகதி உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்த வேளையில் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததுடன், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருந்தது.

தமிழினியின் மரணம் குறித்து பெற்றோர் தரப்பில் கணவரான கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply