தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
