வெளிநாட்டு பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்- மூத்த பெளத்த பிக்கு கைது!

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் தலைமை துறவியாக பணியாற்றும் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணி உனவடுன பயணிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியிருந்தார். பின்னர் இவ்வழக்கு ஹபரதுவ பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.

விகரையின் தலைமை துறவியாக பணியாற்றிய பிக்கு, பயணிக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கிய பின்னர், அவரை விகாரையில் உள்ள அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விசாரணையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பெண் கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபரதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply