வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்தே தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்க தீர்மானம்!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்தே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறை ஒகஸ்ட் 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையை செயல்படுத்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வெரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் தற்காலிக சாரதி உரிமத்தைப் பெற வேண்டும்.

எனினும் இந்த அனுமதி பத்திரத்திற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை தொடர்பில் ஏற்படும் சிரமம் குறித்து எதிர்மறையான கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply