அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வரியை குறைக்க தொடர் பேச்சுவார்த்தை!

அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் குறித்த அரசு அதிகாரிகளுக்கு இடையில் ஓன்லைன் முறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆரம்பத்தில் 44% வரியை விதித்திருந்தார்.

அதனை அண்மையில் 30% வரியாக திருத்தியமைக்கப்பட்டது.

குறித்த வரிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply