ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பிற்பகல் 1:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வர்த்தகம் நிலையம் மூடப்பட்டிருந்த காரணத்தினால் தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் தீ பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
