சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழுக்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் யாழ். பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராசாவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

