பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் பயணித்த மீனவர் மாயம்!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த நபர் ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கிய படகில் 6 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதி புறப்பட்ட குறித்த படகானது, இன்று மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் பேருவளை கடலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply