கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து காலமானார்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மு.க. முத்து உடல்நல குறைவால் இன்றையதினம் (19) சென்னையில் காலமானார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1970-களில் தமிழ்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மு.க.முத்து, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு. சமையல்காரன் ஆகிய பாடங்களில் நடித்தவர்.

நடிப்பு மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் தனது சொந்த குரலில் சிறந்த பாடல்கலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply