நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்த்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
29 வயதுடை யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
