கேகாலை, கலிகமுவ பகுதியில் அரச பேருந்தும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து சம்பவம் இன்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த அரச பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இடம்பெற்ற விபத்தில் 21 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்டுகின்றது.
காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
