குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் வீசிவிடப்பட்டிருந்த குழந்தை தற்போது மருத்துமனையில் தாதியர்களின் கவனிப்பில் உள்ளது.
பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த வாரம் பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற நிலையில் , பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குழந்தையை தத்தெடுப்பதற்காக உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் போட்டி போட்ட வண்ணம் இருப்பதாகவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புக்கள் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயால் தூக்கி வீசப்பட்ட பிஞ்சுக் குழந்தையை தற்போது தாதியர்கள் தாயைப் போல் பராமரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

