அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு!

2025 ஜனவரி தொடக்கம் மே மாதம் வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 1,942.36 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் கிடைக்கப்பெற்ற அரசாங்கத்தின் 1,619.23 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடும்போது இது 19.95% வீதம் அதிகமாகும்.

குறித்த காலப்பகுதியில் அரசாங்க வரி வருமானம் 1,491.25 பில்லியன் ரூபாவில் இருந்து 1,802.48 பில்லியன் ரூபா வரையில் 20.87% அதிகரித்ததே இதற்கான முக்கியக் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply