ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞன் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயதுடைய செ.பிரசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம் (19) மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply