18 மாதங்களுக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டையில் மீண்டும் உப்பு உற்பத்தி!

லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் மீண்டும் உப்பு உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.

வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக லங்கா உப்பு நிறுவனம் உப்பு உற்பத்தியை நிறுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று (21) காலை உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

18 மாதங்களுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உப்பு உற்பத்தியில் 40,000 மெட்ரிக் தொன் உற்பத்தி எதிர்பாக்கப்படுவதாக லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் உப்பு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 40,000 மெட்ரிக் தொன் உப்பு மட்டுமே பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply