புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை!

அரசியலமைப்பு சபை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) கூடவுள்ளது.

இதில் புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதியின் முன்மொழிவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேனவின் பெயரை அடுத்த பிரதம நீதியரசராகப் பரிந்துரைத்து, அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை நடைபெறவுள்ள கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ 27 ஆம் திகதி ஓய்வு பெற உள்ள நிலையில், வெற்றிடமாகும் இடத்தை நிரப்ப புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply