அம்பாறை – பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர், அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சரோஜா உதயங்கனி என்ற 22 வயதுடையே பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண், அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று , இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த தாயும், தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதியதலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
