யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் நேற்று (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனமும், கந்தர்மடம் பகுதியில் இருந்து யாழ்.நகர பகுதிக்கு சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து சம்பவத்தின் போது சுமார் 30 நிமிடங்கள் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

