வீதியை விட்டு விலகி பேருந்து விபத்து- 16 பாடசாலை மாணவர்கள் காயம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்த நிலையில் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதுடன், தற்போது 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply