பெண் ஒருவர் சுட்டுக்கொலை!

மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண், அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அவரின் அருகில் இருந்த 10 வயது சிறுவனும் காயமடைந்துள்ளான்.

காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply