சோஷலிசம் இளைஞர் சங்கத்தினர் சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் இன்று (23) யாழுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த பயணத்தின் போது,
குருநாகல் புகையிரத நிலையத்தில் நூல்கள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அநுராதபுர புகையிரத நிலையத்திலும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும். அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

