வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் வருடாந்திர மகோற்சவத் திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (23) தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
காலையில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஐந்து சுவாமிகள் தேருக்கு எழுந்தருளினார்.
ஆறுமுகப்பெருமான் பின்னே வர பரிவார தெய்வங்கள் தேரில் ஆரோகணித்தனர்.
மாவை கந்தனின் தேர் திருவிழா காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் கூடி விழாவைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
