புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று!

முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (24) நடைபெறவுள்ளது.

குறித்த விவாதம் இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டது.

இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும், சட்டமூலம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக குறித்த விவாதத்தை எதிர்காலத்தில் நடத்த நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply