தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
சுகாதார நிர்வாக அதிகாரி மீது குறிவைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், ஆனால் துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
