நாட்டுக்கு சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட பெருமளவான போதை பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இன்று (25) காலை குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த சந்தேக நபர் கனடாவிலிருந்து கத்தார், தோஹாவிற்கு போதைப்பொருள் தொகுதியைக் கொண்டு சென்று அங்கிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
