முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருட்களுடன் கைப் பை ஒன்று இருந்தமையை ஊர்மக்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கிராமசேவகருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராமசேவகர் கிணற்றினை பார்வையிட்டபோது சடலங்கள் நீரில் மிதப்பதை அவதானித்தனர்.
இதன்பின்னர் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உசாகரன் மாலினி (வயது38) , உசாகரன் மிக்சா (வயது11) உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சடலங்களை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
