ரணில் போன்றோரே கறுப்பு ஜூலையை ஏற்படுத்தினர் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று (24) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பான விடயம் பற்றி கலந்துரையாடும் போது வெள்ளைப் பத்திரிகை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் அமைச்சர் பிமல் தெரிவிக்கையில்,
1981இல் ரணில் விக்ரமசிங்கவால் கொண்டுவரப்பட்ட வெள்ளைப் பத்திரிகையின் நோக்கம் முழுமையாக கருமையானது.
குறித்த வெள்ளைப் பத்திரிகை மூலம் கறுப்பு வேலைத்திட்டங்களை கொண்டு வந்த ரணில் போன்றோரே யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைத்தனர். கறுப்பு ஜூலையையும் ஏற்படுத்தினர்.
இப்போது அரகலய வழக்கிலும் ரணில் தோல்வியடைந்துள்ளார்.
கறுப்பு ஜூலையை உருவாக்கிய அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களில் தற்போதுள்ள ஒருவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே- எனத் தெரிவித்திருந்தார்.
