நடைபாதையில் உள்ள தற்காலிக வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்புறம் உள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்கு நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறும், அதனை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்களின் அத்தனை வியாபார நிலையப் பொருட்களும் சபையினால் கையகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபாதையில் வாகனங்கள் நிறுவத்துவதும் முற்றாக தடை செய்யப்படுகின்றது. குறித்த அறிவித்தலினை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்துப் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply