கனடாவில் இருந்து யாழ் வருகை தந்த நபர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய (24) தினம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

குறித்த நபரின் மனைவியும், மூன்று பிள்ளைகளும் கனடாவில் உள்ளனர்.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் குறித்த நபர் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் வீட்டுக்கு நேற்று பிற்பகல் அவரது மச்சான் சென்றிருந்த நிலையில், அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெருப்படுத்தியிருந்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply