வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வடமாகாண குத்துச்சண்டை போட்டி வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடாத்தப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில்,
முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் 7 தங்கம், 6 வெள்ளி பதக்கங்களைப் பெற்று முதலிடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர்.
குறித்த போட்டியில் பெண்கள் பிரிவில் 2ஆம் இடத்தை வவுனியா மாவட்டமும், 3ஆம் இடத்தை கிளிநொச்சியும் பெற்றுக்கொண்டது.
ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 1ஆம் இடத்தை வவுனியாவும், 2ஆம் இடத்தை யாழ்ப்பாணமும், 3ஆம் இடத்தை முல்லைத்தீவு மாவட்ட அணியும் பெற்றுகொண்டமை குறிப்பிடதக்கது.


