இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்தும், ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியா வாழ் மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டம் லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
லண்டன் தமிழீழத்தின் சுயநிர்ணய இயக்கம் [MSDTE], தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றது’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
