அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திய நபர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

கொட்டடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பற்றிக்கிளே ஜோபாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த நபர் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.

இதன்பின்னர் அதிகாலை 4:15 மணியளவில் குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவரை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தன்நிலை மறந்து இவர் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply