கறுப்பு ஜூலை நினைவேந்தல்- தீப்பந்தம் ஏந்தி நெல்லியடியில் போராட்டம்!

கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தீப்பந்தப் போராட்டம் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.எ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தீப்பந்தப் பேராட்டத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply