மருதானை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் மூவர் பணி இடைநீக்கம்!

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்துவந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்ப்பைப் பேணிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த கையடக்க தொலைபேசியில் பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குரல் பதிவுகள் இருந்துள்ளன.

இதன் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் 22, 30 மற்றும் 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply