தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை குறி வைத்து துப்பாக்கி சூடு- சந்தேகநபர் கைது!

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் வைத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி அதிகாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டமையால் சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply