மாலைதீவில் ஜனாதிபதிக்கு சிறந்த வரவேற்பு!

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் இன்று (28) காலை மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேளனா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில், மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றார்.

மாலைதீவின் வேளனா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழு ஒன்று அழகான கலாச்சார நடனத்தை நிகழ்த்தியது. மேலும் ஜனாதிபதி சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு விழா இன்று பிற்பகல் மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் தலைமையில் நடைபெறும்.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply