அமெரிக்காவின் வரி வீதத்தை மேலும் குறைக்க தொடர் கலந்துரையாடல்!

அமெரிக்காவால் இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளிடையே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 01ஆம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடல்களில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கை பிரதிநிதிகள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை குறைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் தூதுவருக்கும் இடையே நிகழ்நிலை ஊடாக கடந்த 25ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அமெரிக்கா அறிவித்தது.

இந்த வரி விதிப்பு ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி வீதத்தை மேலும் குறைக்க அரசாங்கம், அமெரிக்காவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply