நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம்- கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (28) நடைபெற்றது.

நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை செங்குந்தர் பரம்பரையினரால் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன்படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து.

நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழாக்கள் இடம்பெறும்.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply