பேராதனை- யடிநுவர, யஹலதென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (52 வயது), அவரது மனைவி (44 வயது) மற்றும் மகள் (17 வயது) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
