குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கெலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிலிருந்து நேற்று கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரான இவர், பாணந்துறை மற்றும் களுத்துறை பகுதிகளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் பத்தே சுரங்க மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படுகிறார்.

குறித்த நபர் ஒரு ஒப்பந்தக் கொலையாளி என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply