ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் நடைபெறும் என லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார்.

நிர்வாகப் பிரச்சினைகள், பணி நிலைமைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் பல தடவைகள் முறையிட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ரயில்வே பொது மேலாளருடன் நேற்றையதினம் (28) நடைபெற்ற கலந்துரையாடலிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படவில்லை என சந்தன வியந்துவ தெரிவித்தார்.

எனவே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடருந்துகளும் சேவையில் ஈடுபடாது என்றும் LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply