டிக் டொக் சமூக வலைத்தளத்தில் அறிமுகமான காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் டிக் டொக் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை பதிவேற்றி தன்னை பிரபலமானவராக காட்டிக்கொண்டு வந்துள்ளார்.
குறித்த இளைஞனுடன் டிக் டொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி, அவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது காதலனுக்கு, அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவாடி அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.
வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவாடி காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், வீட்டில் நகைகளை களவாடிய யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவாட உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில்லாம மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்மை குறிப்பிடத்தக்கது.
