முச்சக்கர வண்டி விபத்து- இளைஞர்கள் படுகாயம்!

நுவரெலியா லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்ட பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து சம்பவத்தின் போது முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின்னால் பயணித்த அவரது நண்பர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply